அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: கரோனா சான்றிதழ் அவசியம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. 

News image

சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

Updated On :19 மார்ச் 2021, 7:59 am

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்கள் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டுக்கான உத்திரத் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து மார்ச் 28-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 

சபரிமலை கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருப்பது அவசியமாகும். 

மேலும், மாத பூஜையின் தொடர்ச்சியாக இன்று காலை 7.15 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு தந்திரி கண்டரு ராஜீவரு விழாவைக் கொடியேற்றித் தொடங்கி வைத்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.