கரோனாவிலிருந்து தப்பிக்க இந்த மூன்றையும் தவிர்க்கலாம்
கரோனா.. 2019-ஆம் ஆண்டு உச்சரிக்கத் தொடங்கிய ஒற்றைச் சொல்.. இன்னமும் பல லட்சம் மக்களால் நாள்தோறும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.


கரோனா.. 2019-ஆம் ஆண்டு உச்சரிக்கத் தொடங்கிய ஒற்றைச் சொல்.. இன்னமும் பல லட்சம் மக்களால் நாள்தோறும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
முதல் அலையின் போது இழந்த வாழ்வாதாரங்களும், உயிரிழப்புகளின் பாதிப்புகளில் இருந்தே மக்கள் இன்னும் வெளியே வர வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது அலைக்கான சாத்தியங்கள் தென்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் அல்ல, நாட்டில் அல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
அரசின் சரியான திட்டமிடப்படாத செயல்பாடு, பொதுமக்களின் கவனக்குறைவு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதால் தவிர்க்க முடியாதது என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும், சிலவற்றை நம்மால் தவிர்க்க முடியும்.
அதுதான், கூட்டமான இடங்களைத் தவிர்ப்பது. முக்கியமாக நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், சந்தைகள் போன்றவற்றுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.
குறுகிய இடத்தில் அமர்ந்தோ அல்லது போதிய இடைவெளியின்றி மற்றவர்களுடன் இருக்க வேண்டிய இடங்களைத் தவிர்த்து விடுங்கள். அதற்கு மாற்று வழிகளைக் கடைப்பிடிக்கலாம். கடைகளுக்குச் செல்லும் போது, பணியாற்றும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.
மூடப்பட்ட, காற்று, வெளிச்சம் நுழையாத அறைகளுக்குள் இருப்பதை மக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதில்லாமல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவையும் நிச்சயம் அடுத்த அலையில் நம்மை சிக்காமல் காக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...