சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

பின்வாங்கப்போவதில்லை: 120-வது நாளை எட்டும் விவசாயிகள் போராட்டம்

தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் நாளையுடன் 120-வது நாளை எட்டுகிறது.

News image
போராட்டத்தில் விவசாயிகள்
Updated On :24 மார்ச் 2021, 4:25 am

DIN

தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் நாளையுடன் 120-வது நாளை எட்டுகிறது. 119-வது நாளாக விவசாயிகள் தில்லி சாலைகளில் அமர்ந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். 

தில்லி - ஹரியாணா மாநிலங்களுக்கு இடையே முக்கியமான எல்லைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. டிக்ரி, சிங்கு எல்லைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

தில்லியிலிருந்து வரும் வாகனங்கள் செல்வதற்காக காஜிப்பூர் எல்லை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. தில்லி - ஹரியாணா சாலைகளுக்கு பதிலாக மாற்று சாலைகளை பயன்படுத்த போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 119 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.