

உத்தரகண்ட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஹோலி, மாகாகும்பமேள ஆகிய பண்டிகைகளுக்காக அம்மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 30 வரை பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் புதன்கிழமை வெளியிட்டார்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி,
அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கரோனா விதிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கடைப்பிடிக்கத் தவறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றார்.
தற்போது, மாநிலத்தில் 1,112 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை 96,062 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று காரணமாக 1,706 பேர் இறந்துள்ளனர்.
மேலும், ஏப்ரல் 1 முதல் 30 வரை ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. கரோனா தொற்று காரணமாக இந்தாண்டு கும்பத்தை 30 நாள்கள் மட்டும் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.