ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அமித் ஷாவைச் சந்தித்தாரா சரத் பவார்? சஞ்சய் ரௌத் விளக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்தித்ததாக வெளியான தகவலை சிவசேனை எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் மறுத்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :29 மார்ச் 2021, 11:48 am

DIN


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்தித்ததாக வெளியான தகவலை சிவசேனை எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் மறுத்துள்ளார்.

இதுபற்றி ரௌத் கூறியது:

"சில விஷயங்களை அந்தந்த நேரத்திலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். இல்லையெனில் அவை குழப்பத்தை ஏற்படுத்திவிடும். சரத் பவார், அமித் ஷா இடையே எவ்வித ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை என நான் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவிப்பேன். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்."

முன்னதாக, சரத் பவார் மற்றும் அமித் ஷா ஆமதாபாத்தில் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி கருத்து தெரிவிக்க அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை மறுத்துவிட்டார். அனைத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்றார் அமித் ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.