மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் வீட்டோடு சேர்ந்த கடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் மூவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மொகதா தாலுகாவின் கீழ் உள்ள பிரம்மங்காவ்ன் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் மனைவி, தாய் மற்றும் 10 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்ததாக மொகடா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்ததாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் தீ மளமளவென வீட்டிற்குள் பரவியது.
உயிரிழந்தவர்கள் கங்குபாய் மோல் (78), துவாரகா அனந்தா மோல் (46), பல்லவி மோல் (15), கிருஷ்ணா மோல் (10) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


