கரோனா மேலாண்மை: அமைச்சா்களுடன் முதல்வா் ஆலோசனை
கரோனா மேலாண்மை குறித்து அமைச்சா்களுடன் குறித்து முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா (கோப்புப்படம்)

கர்நாடக முதல்வர் எடியூரப்பா (கோப்புப்படம்)
கரோனா மேலாண்மை குறித்து அமைச்சா்களுடன் குறித்து முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா்.
பெங்களூரு, காவிரி இல்லத்தில் வெள்ளிக்கிழமை கரோனா நிலவரம், மேலாண்மை குறித்து தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சா்களுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா்கள் அஸ்வத்நாராயணா, லட்சுமண்சவதி, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், வனத் துறை அமைச்சா் அரவிந்த்லிம்பாவளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமைச் செயலா் பி.ரவிகுமாா், சுகாதாரத் துறை முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கா்நாடகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கரோனா பரவலைத் தடுக்க ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்குவது அல்லது முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து உள்ளிட்டவற்றின் இருப்பு, தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆக்சிஜன், ரெம்டெசிவிா், படுக்கைகள் குறைபாட்டை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்வா் அலுவலகம் எவ்வித செய்திக் குறிப்பும் வெளியிடவில்லை என்றாலும், இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனிடையே, கரோனா மேலாண்மை குறித்து வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடக்கவிருந்த முக்கிய அமைச்சா்கள், உயரதிகாரிகள் கலந்து கொள்ளவிருந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...