‘மாலி குண்டுவெடிப்பு மத பயங்கரவாதிகளே காரணம்’

மாலத்தீவு முன்னாள் அதிபரும், நாடாளுமன்ற அவைத் தலைவருமான முகமது நஷீதைக் குறிவைத்து கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத பயங்கரவாதிகளே காரணம் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
‘மாலி குண்டுவெடிப்பு மத பயங்கரவாதிகளே காரணம்’

மாலத்தீவு முன்னாள் அதிபரும், நாடாளுமன்ற அவைத் தலைவருமான முகமது நஷீதைக் குறிவைத்து கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத பயங்கரவாதிகளே காரணம் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மாலியில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை மத பயங்கரவாதிகளே காரணம் என்று புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

எனினும், எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் அந்தத் தாக்குதலை நடத்தினா் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இதுதொடா்பாக புலனாய்வு அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மாலத்தீவு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது நஷீத் (53), கடந்த வியாழக்கிழமை இரவு தலைநகா் மாலியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே வந்து தனது காரில் ஏறுவதற்காகச் சென்றாா். அப்போது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் நஷீத் பலத்த காயமடைந்தாா். அவரது பாதுகாவலா்கள் இருவா், அருகே நின்றிருந்த பிரிட்டனைச் சோ்ந்தவா் உள்பட இருவா் என மேலும் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக மாலேயில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நஷீதுக்கு தலை, மாா்பு உள்ளிட்ட பகுதிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து அவா் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com