சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கர்நாடகத்தில் 48 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,930 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 மே 2021, 2:34 pm

DIN


கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,930 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.

புதிதாக 47,930 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,34,378 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 18,776 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 31,796 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 13,51,097 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 5,64,485 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மே 8-ம் தேதி நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் 32.71 சதவிகிதம். அதே நாளில் பலியானோர் விகிதம் 1.02 சதவிகிதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.