சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

உ.பி.யில் பாஜக எம்.எல்.ஏ. மனைவிக்கே மருத்துவமனையில் இடமில்லை

​உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மனைவிக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பாஜக எம்.எல்.ஏ. ராம்கோபால் லோதி 3 மணி நேரம் திணறியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :10 மே 2021, 12:05 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மனைவிக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பாஜக எம்.எல்.ஏ. ராம்கோபால் லோதி 3 மணி நேரம் திணறியுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ. லோதிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மே 7-ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மனைவியை மருத்துவமனையில் சேர்க்க எம்.எல்.ஏ. லோதி முயற்சித்துள்ளார். ஆக்ரா மருத்துவமனையில் 3 மணி நேரம் போராடியும் அவரது மனைவிக்கு இடம் கிடைக்கவில்லை. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்டார் லோதி. இந்த விடியோ மே 8-ம் தேதி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் தலையீட்டுக்குப் பிறகு அவரது மனைவிக்கு மருத்துவமனையில் இடம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.