தில்லியில் குறைகிறதா கரோனா பாதிப்பு?
தில்லியில் புதிதாக 12,651 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் புதிதாக 12,651 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியான நிலையில், இன்று 12,651 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் 24.56 சதவிகிதமாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் நேற்று 21.67 சதவிகிதமாக இருந்தது. இது இன்று மேலும் குறைந்து 19.10 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,36,218 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், தொடர்ச்சியாக 5 நாள்களுக்குப் பிறகு நேற்று 300-க்கும் கீழ் பதிவான கரோனா பாதிப்பு, இன்று மீண்டும் 300-ஐத் தாண்டி பதிவாகியுள்ளது.
மேலும் 319 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 19,663 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13,306 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,31,297 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 85,258 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் ஒட்டுமொத்தமாக இறப்பு விகிதம் 1.47 சதவிகிதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...