பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னெள பயணம்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேச மாநில லக்னெளவிற்கு இன்று (மே 11) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.


பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேச மாநில லக்னெளவிற்கு இன்று (மே 11) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புத் துறையால் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மருத்துவமனைகளை அவர் பார்வையிட உள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாதுகாப்புத் துறையினர் சார்பில் கரோனா சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் லக்னெளவில் இரண்டு மருத்துவமனைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த இரு மருத்துவமனைகளையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட உள்ளார். மேலும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...