ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கரோனா சிகிச்சை மையங்களாக மாறும் உ.பி. மழலையர் பள்ளிகள்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மழலையர் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

News image
கரோனா சிகிச்சை மையங்களாக மாறும் உ.பி. மழலையர் பள்ளிகள்
Updated On :12 மே 2021, 11:07 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மழலையர் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கரோனா மையங்களாக மாற்றப்பட்ட மழலையர் பள்ளிகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

உத்தரப் பிரதேசத்தில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நொய்டா மாவட்டத்தில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால், ஏராளமான மருத்துவமன படுக்கைகள் நிரம்பியுள்ளன.

இதனால் மழையர் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மழலையர் பள்ளிகளில் உள்ள கரோனா மையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

ஜூன் 30-ம் தேதி வரை மழலையர் பள்ளிகள் கரோனா மையங்களாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.