இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சர்வதேச சந்தையிலிருந்து மத்திய அரசே தடுப்பூசியை வாங்க வேண்டும்: தில்லி அரசு

மாநில அரசுகளுக்குப் பதில் மத்திய அரசே சர்வதேச சந்தையிலிருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய வேண்டும் என தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 மே 2021, 11:41 am

DIN


மாநில அரசுகளுக்குப் பதில் மத்திய அரசே சர்வதேச சந்தையிலிருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய வேண்டும் என தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுடன் காணொலி வாயிலான கூட்டத்தில் சத்யேந்தர் ஜெயின் பல்வேறு விஷயங்களை எழுப்பியுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் ஜெயின் கூறியது:

"தடுப்பூசி விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற நெருக்கடி காலத்தில் நிறுவனங்கள் பெரிதளவில் லாபம் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது.

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அதன் தயாரிப்பு முறையை நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களிடம் பகிர வேண்டும்.

உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் தடுப்பூசியை பெறக் கூடாது. மாநிலங்கள் எதற்காக தனியாக ஒப்பந்தப் புள்ளி மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்? இது நாட்டுக்கு கெட்ட பெயரைக் கொடுக்கும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.