ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 15,747 பேருக்கு கரோனா; 312 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 15,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :14 மே 2021, 11:57 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 15,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 2.63 லட்சம் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், 15,747 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,96,628ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 312 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 16,958 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1.17 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 26,174 பேர் குணமடைந்தனர். இதுவரை 13,85,855 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

1,57,257 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 1.44 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.