'2-டிஜி' மருந்து கரோனாவிலிருந்து விரைந்து பலனளிக்கும்: ஹர்ஷ் வர்தன்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ள ’2-டிஜி’ (டியோக்ஸி டி குளுக்கோஸ்) தடுப்பு மருந்து விரைந்து பலனளிக்கும்
ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ள ’2-டிஜி’ (டியோக்ஸி டி குளுக்கோஸ்) தடுப்பு மருந்து விரைந்து பலனளிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 

’2-டிஜி’ தடுப்பு மருந்தின் முதல்கட்ட விநியோகத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று (மே 17) தொடக்கி வைத்தனர்.

பின்னர் இது குறித்து அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் 2-டிஜி தடுப்பு மருந்து உள்நாட்டிலேயே கண்டறியப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஆக்ஸிஜன் தேவையினைக் குறைக்கலாம். மேலும் கரோனாவிலிருந்து விரைந்து குணமடையலாம். கடந்த ஓராண்டிற்கும் மேலாக கரோனாவுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்.

நமது விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கும் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் தலைமையின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ கரோனாவுக்கு எதிராக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com