தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டில் ஒரே நாளில் 2.63 லட்சம் பேருக்கு கரோனா; 4,329 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2.63 லட்சம் பேருக்கு கரோனா கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image
நாட்டில் ஒரே நாளில் 2.63 லட்சம் பேருக்கு கரோனா; 4,329 பேர் பலி
Updated On :18 மே 2021, 4:24 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2.63 லட்சம் பேருக்கு கரோனா கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 2,63,533 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,52,28,996-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33,53,765 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 4,329 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,78,719-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 4,22,436 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,15,96,512-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.