கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க காற்றோட்டமான இடத்தில் வசிப்பது அவசியம் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கரோனா ஏற்படாமல் தடுக்க சமூக இடைவெளி, முகக்கவசத்துடன் காற்றோட்டம் இருக்க வேண்டும். வீடுகளில் ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்திருப்பது நல்லது.
வீட்டில் கதவு, ஜன்னல்களை பூட்டியிருந்தால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மின்விசிறி மூலமாக கூட கரோனா பரவ வாய்ப்புள்ளது.
எனவே நாம் தங்கியிருக்கும் வீட்டில் அறைகளில் காற்றோட்டம் இருந்தால் காற்றில் உள்ள வைரஸின் அளவு குறையும். அலுவலங்களிலும் காற்றோட்டமான சூழ்நிலை இருப்பது நல்லது. காற்றோட்டம் குறைவான வீடுகளில் 'எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்' எனும் காற்று வெளியேற்றும் விசிறியை வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வைரஸ் பரவலைத் தடுக்க அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும் என்ற 3 வழிகளை அவர் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 25% உயர்வு!
பாஜகவில் இணைந்த லியாண்டா் பயஸ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
தவெக தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது!
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

