உத்தரப் பிரதேசத்தில் பகுதிநேர ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு
உத்தரப் பிரதேசத்தில் பகுதிநேர ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் பகுதிநேர ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் பலியாகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் உத்தரப் பிரதேசத்திலும் கரோனா பரவல் காரணமாக பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த ஊரடங்கை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தடுப்பூசி, தொழில்துறை நடவடிக்கைகள், மருத்துவப் பணிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,046 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 226 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 94,482 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...