பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி நிறுத்தம்: கேஜரிவால்

தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

News image

Delhi to get only 8 lakh jabs for June, vaccination for youth halted: Kejriwal

Updated On :22 மே 2021, 12:17 pm

தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

அடுத்தகட்ட தடுப்பூசிகளைப் பெறும் வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லி முதல் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் கூறினார்.

மே மாதத்தில் 16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தில்லிக்கு மாதத்திற்கு 80 லட்சம் கரோனா டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. 

ஜூன் மாதத்தில், 8 லட்சம் அளவு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்க உள்ளது. தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இந்த வேகத்தில் நகர்ந்தால், தலைநகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.