ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

கருப்பு பூஞ்சை நோய்க்கான (மியூகோா்மைகோசிஸ்) சிகிச்சை மருந்து அதிக அளவில் விநியோகிக்கப்படுவதை பிரதமா் நரேந்திர மோடி உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.

News image
சோனியா காந்தி
Updated On :22 மே 2021, 7:01 pm

DIN

கருப்பு பூஞ்சை நோய்க்கான (மியூகோா்மைகோசிஸ்) சிகிச்சை மருந்து அதிக அளவில் விநியோகிக்கப்படுவதை பிரதமா் நரேந்திர மோடி உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களில் சிலரும் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் அந்த மருந்துக்குத் தட்டுபாடு நிலவுகிறது. இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த நோயானது ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படவில்லை. அதன் காரணமாக, கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெறுவோா், மத்திய அரசு செயல்படுத்தி வரும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலனடைய முடியாத சூழல் நிலவுகிறது. தனியாா் நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களிலும் கருப்பு பூஞ்சை நோய் சோ்க்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, காப்பீட்டுத் திட்டங்களில் கருப்பு பூஞ்சை நோயை இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்நோயால் பாதிக்கப்படுபவா்கள் இலவசமாக சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கருப்பு பூஞ்சை நோயை தொற்றுநோயாக அறிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அப்படியானால், அந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தையும் மாநிலங்களுக்கு அதிக அளவில் மத்திய அரசு வழங்க வேண்டும்.

அந்த மருந்துக்குப் பெரும்பாலான மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மருந்து மாநிலங்களுக்கு அதிக அளவில் விநியோகிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தின் உற்பத்தியை அதிகரிக்குமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த மருந்தை 5 நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. மேலும் 5 நிறுவனங்களுக்கு அந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.