மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் கரோனா கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ஆம் தேதி வரை அம்மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக முதல்முதலில் ஏப்ரல் 12 அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக மே 24 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவினாஷ் லவானியா பிறப்பித்த உத்தரவின்படி,
போபால் மாநகராட்சி மற்றும் பெரேசியா நகரத்தின் கீழ் உள்ள பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசரக்கால பயணங்கள் கட்டுப்பாடுகளின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்றார்.
போபாலில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 1,16,481 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. மொத்தம் இதுவரை 895 இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


