தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'யாஸ்' புயல்: 25 ரயில்கள் தற்காலிகமாக ரத்து

யாஸ் புயல் காரணமாக 25 ரயில்களின் சேவையை கிழக்கு ரயில்வே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

News image
'யாஸ்' புயல்: 25 ரயில்கள் தற்காலிகமாக ரத்து
Updated On :27 ஜனவரி 2024, 8:17 pm

DIN

யாஸ் புயல் காரணமாக 25 ரயில்களின் சேவையை கிழக்கு ரயில்வே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது.

இதன் விளைவாக இன்று (மே 24) முதல் வரும் 29-ம் தேதி வரை ரயில்களின் சேவையை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நியூ தின்சுகியா - தாம்பரம் சிறப்பு ரயில் மே 24-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் - நியூ டின்சுகியா சிறப்பு ரயில் மே 27-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

ஜசிதி (ஜார்கண்ட்) - தாம்பரம் சிறப்பு ரயில் மே 26-ல் ரத்து. தாம்பரம் - ஜசிதி (ஜார்கண்ட்) சிறப்பு ரயில் 29-ம் தேதி ரத்து. 

சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைகுரி சிறப்பு ரயில் மே 26-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. நியூ ஜல்பைகுரி - சென்னை ரயில் மே 28-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.