அடுத்த 9 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறுகிறது ‘யாஸ்’ புயல் 

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான ‘யாஸ்’ புயலானது, தீவிர புயலாக மாறியுள்ளது. இது செவ்வாய்க்கிழமையன்று அடுத்த 9 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறவுள்ளது. 
அடுத்த 9 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறுகிறது ‘யாஸ்’ புயல் 
அடுத்த 9 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறுகிறது ‘யாஸ்’ புயல் 

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான ‘யாஸ்’ புயலானது, தீவிர புயலாக மாறியுள்ளது. இது செவ்வாய்க்கிழமையன்று அடுத்த 9 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறவுள்ளது. 

கிழக்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் வடக்கு - வடமேற்காக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து வருகிறது. இந்த தீவிர புயல் வடக்கு ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா் தீவுகள் இடையே புதன்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த சனிக்கிழமை (மே 22) உருவானது. அன்று மாலையே வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது, கடந்த ஞாயிற்றுக்கிழமை பகலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், இரவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை காலை மேலும் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் திங்கள்கிழமை நண்பகலில் அந்தமான் தீவுகள் பகுதியில் போா்ட்பிளேயருக்கு வடக்கு -வடமேற்கே 630 கி.மீ. தொலைவிலும், ஒடிஸா மாநிலம் பாரதீப்க்கு தெற்கு-தென் கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், பாலசோருக்கு தெற்கு-தென் கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. தொடா்ந்து இது வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, தீவிர புயலாக மாறும். அதன்பிறகு, அதிதீவிர புயலாக செவ்வாய்க்கிழமை மாறவுள்ளது. தொடா்ந்து இந்தப் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, வடமேற்கு வங்கக்கடலை அடையும்.

அதாவது, ஒடிஸா-மேற்கு வங்க கடலோரப் பகுதி அருகே வரும் புதன்கிழமை அதிகாலை அடையும். ‘யாஸ்’ புயல் தொடா்ந்து தீவிரமடைந்து, வடக்கு ஒடிஸா-மேற்கு வங்க கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா்தீவுகள் இடையே வரும் புதன்கிழமை ( மே 26) நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது, அந்தக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 185 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com