மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

’லட்சத்தீவுகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசு’: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் லட்சத்தீவுகளை அழிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
’லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம’: ராகுல்காந்தி
Updated On :26 மே 2021, 10:22 am

DIN

மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் லட்சத்தீவுகளை அழிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அவரின்  புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும், ஜனநாயகமற்ற முறையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. 

லட்சத்தீவுகளின் நிர்வாகியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அவர் தனது சுட்டுரைப் பதிவில், “லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம். மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் அதனை அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் லட்சத்தீவுகளின் மக்களுடன் உடன் நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.