மீரட்டில் 147 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு
மீரட்டில் 147 பேர் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவக்குழுத் தலைவர் அகிலேஷ் மோகன் தெரிவித்துள்ளார்.


மீரட்டில் 147 பேர் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவக்குழுத் தலைவர் அகிலேஷ் மோகன் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவா்கள், கரோனாவில் இருந்து மீண்டவா்களுக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. இது, நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ள நபா்களை எளிதில் தாக்குகிறது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மூக்கில் வலி, சளியுடன் ரத்தம் வருதல், மூக்கில் துா்நாற்றம், தலைவலி, கண்ணம் பகுதியில் வலி, கண் தெளிவாக தெரியாமல் இருப்பது ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது கண்ணம், மூக்கு பகுதிகள் கருப்பு நிறத்தில் மாறும். இந்நிலையில், மீரட்டில் 147 பேர் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவக்குழுத் தலைவர் அகிலேஷ் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 88 பேர் கருப்புப் பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தை பொறுத்தவரையில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...