தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: 22,701 கட்டுப்பாட்டு மண்டலங்கள்

தில்லியில் 22,701 கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

News image
Updated On :29 மே 2021, 8:59 pm

DIN

தில்லியில் 22,701 கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தில்லி அரசின் வருவாய் துறையின் தரவுகளின்படி, மத்திய தில்லியில் அதிகபட்சமாக 6,523 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இது மொத்த மண்டலங்களில் 29 சதவீதமாகும். இதையடுத்து, புது தில்லியில் 4,229, தென்மேற்கு தில்லியில் 2,313, தெற்கு தில்லியில் 2,308, வடக்குத் தில்லியில் 1,848 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.

கிழக்கு தில்லியில் குறைந்த அளவாக 197 மண்டலங்களும், ஷாதராவில் 262, வடகிழக்கு தில்லியில் 326 கட்டுப்பாட்டு மண்டலங்களும் உள்ளன. நகரில் 14, 253 கட்டுப்பாட்டு மண்டலங்கள் செயல்பாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.