விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மகாராஷ்டிரத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிரத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 மே 2021, 4:32 pm

DIN

மகாராஷ்டிரத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டு ஜூன் 15 வரை அமலில் இருக்கும். மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து, சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும். 

அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடைகள் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், பிற்பகல் 3 மணி முதல் மருத்துவம், இதர அவசர தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றார். 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,600 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16-க்குப் பிறகு இதுவே குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.