தெலங்கானாவில் ஜூன் 9 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு
தெலங்கானாவில் ஜூன் 9-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தெலங்கானாவில் ஜூன் 9-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் ஏற்கெனவே அமலில் இருக்கும் பொது முடக்கம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பொது முடக்கத்தை நாளை முதல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"குடிமக்கள் வீடு திரும்ப பிற்பகல் 2 மணி வரை பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை பொது முடக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...