இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உ.பி. ரப்தி ஆற்றில் வீசப்பட்ட சடலம்: இருவர் கைது

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :31 மே 2021, 7:13 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் பிபிஇ உடை அணிந்த இருவர், கரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை ரப்தி ஆற்றில் வீசியுள்ளனர்.  பாலத்திலிருந்து இறந்தவரின் உடலை அவர்கள் ஆற்றில் தூக்கி வீசும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அவ்வழியே சென்றவர்கள் இந்த விடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஆற்றில் தூக்கி வீசப்பட்டவர் உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் நாத் மிஸ்ரா என தெரிய வந்துள்ளது. இவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மே 25-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 28-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, கரோனா வழிமுறைகளுக்குள்பட்டு அவரது உடல் குடும்ப உறுப்பினர்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.