தீபாவளிக்கு அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்: வணிக சிலிண்டர் விலை ரூ.266 உயர்வு

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலையை ரூ.266 உயர்த்தி எண்ணெண் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தீபாவளிக்கு அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்: வணிக சிலிண்டர் விலை ரூ.266 உயர்வு
தீபாவளிக்கு அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்: வணிக சிலிண்டர் விலை ரூ.266 உயர்வு
Published on
Updated on
1 min read


புது தில்லி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலையை ரூ.266 உயர்த்தி எண்ணெண் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன் மூலம் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ஒன்றுக்கு ரூ.266 உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

இந்த விலை உயர்வு காரணமாக, தில்லியில் வணிக எரிவாயு உருளை விலை இதுவரை ரூ.1,734 ஆக இருந்தது, இன்று முதல் ரூ.2000 ஆக உயர்ந்துள்ளது.

மிக அதிகபட்சமாக சென்னையில் இன்று முதல் வணிக சிலிண்டர் விலை ரூ.2,133 ஆக உயர்ந்துள்ளது. இதுவே மும்பையில் ரூ.1,950 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,073 ஆகவும் உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com