எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

புது தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

புது தில்லியில் உள்ள ஷாஜகான் சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில், தூர்தர்ஷன் இயக்குநரின் வீட்டுப் பணியாளர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நேரிட்டது.

News image
புது தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
Updated On :5 நவம்பர் 2021, 6:50 am

DIN


புது தில்லி: புது தில்லியில் உள்ள ஷாஜகான் சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில், தூர்தர்ஷன் இயக்குநரின் வீட்டுப் பணியாளர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து அதிகாலை 2 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. உடனடியாக விரைந்துச் சென்ற தீயணைப்புத் துறையினர், வீட்டில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டனர். 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், தூர்தர்ஷன் இயக்குநர் மகேந்திரன் சிங் வீட்டில் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.