ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இந்திய எல்லையில் சீன கிராமம்? முக்கியமான கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

தேசிய பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :12 நவம்பர் 2021, 9:15 am

DIN

சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் முப்படை தலைமை தளபதியும் வேறு வேறு நிலைபாடுகளை எடுத்ததாக வெளியான செய்தியை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.

மன்னிக்க முடியாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் முப்படை தலைமை தளபதியும் வேறு வேறு நிலைபாடுகளை எடுத்ததாக வெளியான செய்தியை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.

குறிப்பாக சீன விவகாரத்தில், அரசுக்கு எந்த விதமான வியூகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும் நடுவே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா பெரிய கிராமத்தை எழுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "எங்கள் பகுதியில் சீனா மேற்கொண்ட சட்டவிரோதமான ஆக்கிரமிப்பையும் நியாயமற்ற அவர்களின் கூற்றுகளையும் ஏற்கவில்லை" என குறிப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்துள்ள ராகுல் காந்தி, "நமது தேசிய பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியாவிடம் சரியான வியூகம் இல்லை. மிஸ்டர் 56 இன்ச் அச்சப்படுகிறார்.

இந்திய அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் அதே சமயத்தில், நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களைப் பற்றி நினைத்து கொண்டிருக்கிறேன்" என்றார். 

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முப்படை தளபதி ராவத், "இந்திய எல்லைக்கு வந்து சீனா புதிய கிராமத்தை கட்டமைப்பதாக எழுப்பப்பட்ட சர்ச்சையில் உண்மை இல்லை. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் சீன பகுதிக்கு உள்ளேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்திய எல்லைக்குல் சீனா ஊடுருவவில்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.