ஆதாரமில்லாத வகையில் மாநில கட்சிகளுக்கு கிடைத்த 55 சதவிகித நன்கொடை; அதிர்ச்சி தரும் தகவல்

அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் பெரும்பாலான வருமானம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததால், நன்கொடையாளர்களின் முழு விவரங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது ஆய்வுக்குக் கிடைக்க வேண்டும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 2019-20ஆம் நிதியாண்டில், மாநில கட்சிகள் பெற்ற 55 விழுக்காடு நிதியுதவி அறியப்படாத, ஆதாரமில்லாத வகையில் வந்து சேர்ந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது. இந்த நிதியில் 95 சதவீதம் நிதி தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது.

அந்த காலக்கட்டத்தில், 25 மாநில கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளின் மதிப்பு ரூ. 803.24 கோடியாகும். அதில், ரூ.445.7 கோடி ஆதாரங்கள் இல்லாத வகையில் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆதாரமில்லாத நிதியில் 426.233 கோடி (95.616%) தொகை தேர்தல் நிதி பத்திரங்களாகவும், மீதமுள்ள 4.976 கோடி தன்னார்வலர்களின் பங்களிப்பாகவும் வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

அதே போல, ஆதாரங்கள் இல்லாமல் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை அவர்களின் வருமானத்தில் குறைந்தபட்சம் 70.98% வரை இருக்கும் என கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் மாநில கட்சிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை முதலிடத்தில் உள்ளன. 

இந்த பட்டியலில் ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளமும் இடம்பெற்றுள்ளது. ஆதாரமில்லாத வகையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு 89.158 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.

அதேபோல், தெலுங்கு தேசம் கட்சிக்கு 81.694 கோடி ரூபாயும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 74.75 கோடி ரூபாயும் பிஜு ஜனதா தளத்திற்கு 50.586 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக 45.50 கோடி ரூபாயை ஆதாரமில்லாத வகையில் நன்கொடையாக பெற்றுள்ளது.

மாநில கட்சிகளுக்கு தெரிந்தவர்கள் வழியாக கிடைத்த நன்தொகை, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 184.623 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், 22.98 விழுக்காடு அவர்களது வருமானம் ஆகும். 

மற்ற 172.843 கோடி ரூபாய் உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி, பிரசுரங்களின் விற்பனை, கட்சி வரி போன்ற பிற அறியப்பட்ட ஆதாரங்களில் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 

2018-19 நிதியாண்டுக்கான அறிக்கையில், 23 மாநில கட்சிகளின் வருடாந்திர தணிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கைகளை மதிப்பாய்வு செய்ததில், அவர்களின் மொத்த வருமானம் ரூ. 885.956 கோடியாக அதிகரித்ததாகவும், அதில் ரூ. 481.276 கோடி (54.32%) ஆதாரம் இல்லாமல் வந்தது என ஏடிஆர் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏடிஆர் அறிக்கையில், "அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் பெரும்பாலான வருமானம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததால், அனைத்து நன்கொடையாளர்களின் முழு விவரங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது ஆய்வுக்குக் கிடைக்க வேண்டும்.

வெளிநாட்டு நிதியுதவி பெறும் எந்தவொரு அமைப்போ எந்தவொரு வேட்பாளரையோ அல்லது கட்சியையோ ஆதரிக்கவோ அல்லது பரப்புரை செய்யவோ அனுமதிக்கக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com