உலக நீரிழிவு நாள்: 12 பேரில் ஒருவருக்கு நீரிழிவு; உலகளவில் இந்தியா இரண்டாமிடம்

நாட்டில் 12 பெரியவர்களில் ஒருவருக்கு அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7.40 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதித்திருப்பதாகக் சர்வதேச நீரிழிவு முகமை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள
12 பேரில் ஒருவருக்கு நீரிழிவு; உலகளவில் இந்தியா இரண்டாமிடம்
12 பேரில் ஒருவருக்கு நீரிழிவு; உலகளவில் இந்தியா இரண்டாமிடம்
Published on
Updated on
1 min read


பெங்களூரு: நாட்டில் 12 பெரியவர்களில் ஒருவருக்கு அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7.40 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதித்திருப்பதாகக் சர்வதேச நீரிழிவு முகமை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நீரிழிவு நாள் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகிலேயே அதிக 14.1 கோடி நீரிழிவு நோயாளிகளுடன் சீனா முதலிடத்திலும், இந்தியா 7.40 கோடி நீரிழிவு நோயாளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

4 கோடி பெரியவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்புத் தன்மை குறைவாக இருப்பதும், இவர்கள் இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகும் அதிக அபாயம் இருப்பதும், நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோர் (53.1 சதவீதம்)  நீரிழிவுடன் அல்லது நீரிழிவு பாதிப்பு அறியப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு பாதிப்பு அதிகரிப்பது, நாட்டில் சுகாதாரத் துறையின் சிக்கல்களை அதிகரிப்பதாகவும், தனிநபர்கள் மற்றும் குடும்பத்தின் நலனை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் தற்போது 53.7 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புள்ளிவிவரம் கடைசியாக எடுக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்குப் பின் இது 16 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2030ஆம் ஆண்டில் 64.3 கோடியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் எடுத்துக் கொண்டால் 10.5 பேரில் ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com