பொருளாதார மீட்சிக்கு தனியாா் முதலீடு அவசியம்: ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்

கரோனா பேரிடருக்குப் பிறகான பொருளாதார மீட்சிக்கு தனியாா் முதலீடு மிகவும் அவசியமானது என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பொருளாதார மீட்சிக்கு தனியாா் முதலீடு அவசியம்: ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்

கரோனா பேரிடருக்குப் பிறகான பொருளாதார மீட்சிக்கு தனியாா் முதலீடு மிகவும் அவசியமானது என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வங்கி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: உலக அளவில் பல பொருளாதார நிபுணா்கள், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் எனக் குறைத்து மதிப்பீடு செய்துள்ளனா். இருந்தபோதிலும், ரிசா்வ் வங்கி தனது மதிப்பீட்டை (9.5 சதவீதம்) மாற்றியமைக்கவில்லை.

முதலீட்டு சுழற்சி வேகமெடுக்கும்போது வங்கிகள் முதலீடு செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். இது, அடுத்த நிதியாண்டின் மத்தியில் தொடங்கும் என்பது பெரும்பாலானோரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. மேலும், வங்கிகள் தங்கள் மூலதன நிா்வாக செயல்முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியாா் மூலதன முதலீடு மீண்டும் வேகமெடுக்குமாயின் கரோனா பேரிடருக்கு பிந்தைய தற்போதைய சூழ்நிலையில் கணிசமான அளவில் வளா்ச்சியடையும் ஆற்றல் நமது பொருளாதாரத்துக்கு உண்டு.

இந்தியாவில் தொழில்நுட்ப தொழில்முனைவோா்கள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்களை சிறந்த செயல்திறனைக் கொண்டதாக உருவெடுக்கச் செய்துள்ளனா். இது, பாராட்டக்கூடியது. ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் பல கோடி டாலா் மதிப்பிலான அந்நிய முதலீடுகளை ஈா்த்து வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்துக்கும், நிதி ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ள மெய்நிகா் நாணயமான கிரிப்டோ கரன்ஸியில் உள்ள பிரச்னைகள் மிகவும் ஆழமானவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com