
லடாக் பகுதியில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்ததற்காக எல்லையோர சாலை அமைப்பிற்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
லடாக்கில் கடற்பரப்பிலிருந்து 19,300 அடி உயரமான உம்லிங்லா பாஸ் சாலையை இந்திய ராணுவத்தின் எல்லையோர சாலை அமைப்பு சுமார் 4 மாதத்தில் கட்டியுள்ளது.
சிசும்லேவிலிருந்து டெம்சோக் பகுதிக்கு செல்லும் 52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கு நடுவே உம்லிங்லா பாஸ் அமைந்துள்ளது.
இந்நிலையில், கின்னஸ் உலக சாதனைக்கான விருது இந்தியாவின் எல்லையோர சாலை அமைப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வு இணையவழியாக இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற எல்லையோர சாலை அமைப்பின் இயக்குநர் ராஜிவ் செளத்ரி, சுமார் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் இருக்கக்கூடிய பகுதியில் சாலை அமைக்கும் போது ஏற்பட்ட சவால்கள் குறித்து விவரித்தார்.
முன்னதாக பொலிவ்யா என்ற நாட்டில் 18,953 அடி உயரத்தில் எரிமலையை இணைக்கும் சாலைதான் உலகின் மிக உயரமான சாலையாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.