அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பிரதமர் மோடி தலைமையில் அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு துவக்கம்

சிம்லாவில் 82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (நவ. 17)  தொடக்கி வைத்திருக்கிறார். 

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :17 நவம்பர் 2021, 5:37 am

DIN

சிம்லாவில் 82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (நவ. 17)  தொடக்கி வைத்திருக்கிறார். 

இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள், பேரவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கிறார். மாநாட்டின் இறுதியில் ஹிமாச்சல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நன்றி உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில், இந்த அமைப்பின் நூற்றாண்டுப் பயணம்-மதிப்பீடு, முன்னோக்கிச் செல்லும் வழிகள்; அரசியலமைப்பு, அவையை நடத்துதல், மக்கள் மீதான பொறுப்பு ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.