
தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரம் மேலும் மோசமானது. 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கும் காற்றின் தரக் குறியீடு 352 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 9 ஆவது நாளாக காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் பதிவாகியுள்ளது. நேற்று தில்லியில் காற்றின் தரம் 347 ஆக இருந்த நிலையில் இன்று 352 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்களின் அளவுகளான பி.எம். 2.5 மற்றும் பி.எம்.10 முறையே 188 மற்றும் 301 புள்ளிகளில் உள்ளன.
காற்றின் வேகம் அதிகரித்திருந்தாலும் பி.எம். 2.5 அளவு குறைந்தே காணப்படுகிறது.
காற்று மாசு அதிகரிப்பதன் காரணமாக தில்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாட்டுக்கு எதிராக தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.