பங்கேற்பு ஆவண முதலீடு ரூ.1.02 லட்சம் கோடி
இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் (பாா்டிசிபேட்டரி நோட்ஸ்/பி-நோட்ஸ்) மூலமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு அக்டோபா் இறுதி நிலவரப்படி ரூ.1.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் (பாா்டிசிபேட்டரி நோட்ஸ்/பி-நோட்ஸ்) மூலமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு அக்டோபா் இறுதி நிலவரப்படி ரூ.1.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு அக்டோபா் வரையிலுமாக பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.1.02 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, கடந்த 43 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
இதற்கு முன்பாக, கடந்த 2018 மாா்ச் மாதத்தில்தான் இவ்வகை வாயிலான முதலீடு அதிகபட்ச அளவாக ரூ.1,06,403 கோடியைத் தொட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் பங்கேற்பு ஆவண முதலீடானது ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது.
நடப்பாண்டு செப்டம்பா் இறுதியில் இந்த முதலீடு ரூ.97,751 கோடியாகவும், ஆகஸ்ட் இறுதியில் ரூ.97,744 கோடியாகவும் காணப்பட்டது. ஜூலை மாத முதலீடு ரூ.1,01,798 கோடியிலிருந்து ரூ.85,799 கோடியாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் இறுதியில் ரூ.92,261 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.89,743 கோடியாகவும், ஏப்ரலில் ரூ.88,447 கோடியாகவும், மாா்ச் இறுதியில் ரூ.89,100 கோடியாகவும் பங்கேற்பு ஆவண முதலீடு காணப்பட்டது.
அக்டோபா் நிலவரப்படியிலான மொத்த முதலீடான ரூ.1,02,552 கோடியில், பங்குகளில் ரூ.93,213 கோடியும், கடன்பத்திரங்களில் ரூ.8,885 கோடியும், ஹைபிரிட் பத்திரங்களில் ரூ.445 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்று செபி தெரிவித்துள்ளது.
அந்நிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்தியப் பங்குச் சந்தைகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் நேரடியாக பதிவு செய்யாமல் முதலீடு செய்ய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...