ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எம்.பி.க்கள் இடைநீக்கம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

News image
எதிர்க்கட்சிகள் ஆலோசனை
Updated On :30 நவம்பர் 2021, 6:13 am

DIN

மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையிலிருந்து குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க கூடாது என இடைநீக்கம் செய்வதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, இந்திய கம்யூ. சுப்புராயன், மதிமுக வைகோ, விசிக திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.