தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘சோனியா காந்தியின் காலம் முடிவடைந்தது’: பாஜக துணைத் தலைவர்

சோனியா காந்தியின் காலம் முடிவடைந்து விட்டதாக பாஜகவின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

பாஜக எம்.பி திலீப் கோஷ்

Updated On :30 நவம்பர் 2021, 2:55 am

DIN

சோனியா காந்தியின் காலம் முடிவடைந்து விட்டதாக பாஜகவின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்தது குறித்து செய்தியாளர்களிடம் திலீப் கோஷ் கூறியதாவது:

இதுபோன்ற நாடகங்கள் மிகவும் பழமையானவை. ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சித் தலைவராக விரும்புகிறது. அதேபோல் மம்தா பானர்ஜியும் தலைவராக விரும்புகிறார். சோனியா காந்தியின் காலம் முடிவடைந்துவிட்டது என்றார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.