கேரளத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

கேரளத்தில் அக்டோபர் 25 முதல் திரையரங்குகளைத் திறக்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


கேரளத்தில் அக்டோபர் 25 முதல் திரையரங்குகளைத் திறக்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கரோனா தொற்று குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரையரங்குகள், கல்லூரிகள் திறப்பது குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்படி, அக்டோபர் 25 முதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் மற்றும் பார்வையாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளன. திருமணங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20-இல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் சனிக்கிழமை 13,217 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 13.64 சதவிகிதம். அதேசமயம், 14,437 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,41,155 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com