புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,346 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 6 மாதத்துக்குப் பிறகு பதிவாகும் குறைந்த பாதிப்பாகும்.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் செவ்வாயன்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் எகிறும் மின் கட்டணம்; குவியும் புகார்கள்
29,639 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,31,50,886 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,52,902-ஆக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97.93 சதவீதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்துள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளத்திலும் தொடர்ந்து பாதிப்பும், பலியும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரத்தில் 8,850 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தொற்றுக்கு 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 57,53,94,042 பரிசோதனைகளும், திங்கள்கிழமை மட்டும் 11,41,642 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருநங்கையைத் திருமணம் செய்ததாக கிண்டல் செய்தவா் வெட்டிக் கொலை
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


