
இந்திய விமானப் படையில் பயிற்சியில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழங்கினார்.
அருணாசலில் கடந்த 2019-ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை வீரர் ராஜேஷ் குமார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் விமானப்படை தினத்தையொட்டி அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சென்று வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது, உயிரிழப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது. எனினும் பொருளுதவி செய்வது வீரம் மிக்க குடும்பத்திற்கு சற்று உதவிகரமாக இருக்கும்.
தில்லி அரசு சார்பில் உயிரிழந்த வீரரின் சகோதரிக்கு பாதுகாப்புத் துறையில் பணியாணை வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டது.
நாட்டிற்கு சேவையாற்றியவரது குடும்பத்திற்கு அரசால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.