தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்

கோப்புப்படம்

Published On :

ஜம்மு-காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 

தொடர்ந்து இன்று  ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் பயங்கராதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.