கேரளத்தில் குறையும் கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 7,955 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கேரளத்தில் புதிதாக 7,955 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 79,722 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 9.97 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 11,769 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,791 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தில்லியில் புதிதாக 21 பேருக்கு கரோனா
இன்றைய நிலவரப்படி 90,885 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கேரளத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.8 சதவிகிதம் (2.50 கோடி) பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 45.3 சதவிகிதம் (1.21 கோடி) பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...