எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமரிசித்துள்ளார்.

News image

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

Updated On :21 அக்டோபர் 2021, 8:28 am

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமரிசித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் வியாழக்கிழமை ராணுவ வீரர் ஒருவர் சிறுமி ஒருவரின் பையை சோதனையிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, “ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கூட சந்தேகிக்கும் நிலைதான் தற்போது நீடித்து வருகிறது. இதைத்தான் பாஜக கொண்டு வந்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பாஜகவின் கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.