போன்பேவின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் இனி செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும் என போன்பே அறிவித்துள்ளது.
போன்பே
போன்பே
Published on
Updated on
1 min read

இணைய பணப்பரிவர்த்தனைகள், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் நடைபெற்றுவருகிறது. ஆன்லைனில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது, கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைப்பதன் காரணமாக இணைய பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இணையம் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய செயலியாக போன்பே திகழ்கிறது. இந்நிலையில், 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் இனி செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும் என போன்பே அறிவித்துள்ளது.

யுபிஐ மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள் பல செயலிகளில் இலவசமாக நடைபெறும் நிலையில், கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய முதல் டிஜிட்டல் செயலி போன்பே ஆகும். கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு செயல்முறை கட்டணத்தை மற்ற செயலிகளை போல போன்பேயும் வசூலித்துவருகிறது.

இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "50 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இணைய தளங்களில் கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் கிடையாது. 

பல நிறுவனங்கள் ஏற்கனவே ட்ஜிட்டல் பணப் பிரவர்த்தனை தளத்தில் சிறிய அளவிலான தொகையை செயல்முறை கட்டணமாக வசூலித்துவருகிறது. நாங்கள் கிரெடி கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம்" என்றார்.

ஜூலை மாதம் வெளியான பெர்ன்ஸ்டீன் அறிக்கையில், "வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி வழங்குவதில் போன்பே மற்றும் குகூள் ப்ளே கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக, இந்நிறுவனங்கள் 2.5 முதல் 3 சதவிகிதம் வரை சந்தையில் செலவழித்துள்ளது. அதேசமயம், சந்தையில் செலவிடுவதை பேடிஎம் குறைத்துவருகிறது.

2017ஆம் நிதியாண்டை காட்டிலும் 1.2 சதவிகிதம் குறைவாக தான் பேடிஎம் செலவழித்துள்ளது. அந்த தொகை 2020இல் 0.4 சதவிகிதமாகவும், 2021இல் 0.2 சதவிகிதமாகவும் செலவழிக்கும் தொகை குறைந்துள்ளது. அதற்கு நேர் மாறாக, யுபிஐ, பிஓஎஸ், இணைய பரிவர்த்தனை தொடர் வளர்ச்சி கண்டுள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வரும் காலத்தில் அனைத்து விதமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com