மும்பை: மும்பையில் உள்ள நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை அநன்யா பாண்டே பாண்டே வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
போதைப்பொருள் வழக்கில் கைதாகி மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆா்யன் கானை தந்தையும் நடிகருமான ஷாருக் கான் நேற்று வியாழக்கிழமை காலை நேரில் சந்தித்துப் பேசினாா். சுமாா் 20 நிமிடம் இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்நிலையில், மும்பையில் உள்ள நடிகர் ஷாருக் கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மகன் ஆா்யன் கான் தொடர்பான சில ஆவணங்களை பெறுவதற்காகவே, ஷாருக் கான் வீட்டிற்கு சென்றதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகை அனன்யா பாண்டே வீட்டுக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மும்பை கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக ஆா்யன் கான் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா். அவா்கள் மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டனா்.
மும்பை உயா்நீதிமன்றத்தில் ஆா்யன் கான் சாா்பில் கடந்த 20-ஆம் தேதி மாலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி மற்றும் அதற்கான காரணங்கள்!
டாக்டர் பட்டம் பெற்ற நற்பணி நாயகன் விஜய்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



